சனத்தொகை அதிகரிப்பே காசநோய் பரவலுக்கு முக்கிய காரணி: அமைச்சர் நளிந்த
கொழும்பில் சனத்தொகை அதிகரித்தமையே பல ஆண்டுகளாக காசநோய் பரவுவதற்கு ஒரு முக்கியக் காரணியாக இருந்து வருகிறது என்று சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், 2019ஆம் ஆண்டில் கொழும்பில் 871 காசநோய் நோயாளர்கள் பதிவாகியிருந்ததாகவும், அது 2020ஆம் ஆண்டில் 736 ஆகக் குறைந்ததாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், 2021ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை மீண்டும் 796 ஆக உயர்ந்தது.
நோயாளர்களின் எண்ணிக்கை
அதன்பின்னர், பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 1,093 ஆகவும், 2023ஆம் ஆண்டில் 1,130 ஆகவும் அதிகரித்ததைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அது 2024ஆம் ஆண்டில் 1,064 ஆகவும், 2025 ஆம் ஆண்டில் 968 ஆகவும் குறைந்துள்ளது என்று கூறினார்.

நோய்த்தொற்றுக்கு உள்ளான சில நபர்கள் மருத்துவ சிகிச்சைகளை முறையாக மேற்கொள்ளத் தவறியதே, இந்நோய் மேலும் பரவுவதற்கு ஒரு முக்கியக் காரணம் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |