ஈழத்தமிழர்களை இழிவாக சித்தரித்த கேணல் ஹரிஹரன்
'ஈழத்தமிழர்கள் கொடுப்பதை வாங்கும் பிச்சைக்காரனின் நிலையில் இருப்பதாகவும் அவர்களின் நிலையை கண்டு தான் பரிதாபம் அடைவதாகவும்'' இந்தியாவின் அமைதிப்படையின் உளவுத்துறைக்கு பொறுப்பான கேணல் ஹரிஹரன் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் ஈழத்தமிழர்களை பிச்சைக்காரர்களாகவே நடத்துகின்றார்கள். அதாவது ஜெய்சங்கரைச் சந்திக்கச் சென்ற போதோ அல்லது இந்திய உயர் அதிகாரிகளை சந்திக்கச் செல்கின்ற போது அவர்கள் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு தமிழர்களை தாழ்ந்த நிலையில் வைத்துத்தான பேசுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தற்போதுள்ள இந்தியத் தூதுவர் தமிழர்களைச் சந்திக்கின்ற போது தான் ஒரு மேலாள் என்றும் இவர்கள் தங்களுடைய ஏவலைக் கேட்கக் கூடியவர்கள் என்ற வகையிலும் தான் நடத்துகின்றார்கள். இது ஒரு நல்ல அரசுறவியல் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசுறவியல் பண்பாட்டை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. அதிலும் குறிப்பாக ஈழத்தழிழர்கள் அதனை எதிர்பார்க்க முடியாது என வேல் தர்மா மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |