ஈரானுக்கு பேரிடி! ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீழ்த்த முன்வந்தது உக்ரைன்
ஈரானிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள பிற நாடுகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து, ரஷ்யா ஈரானிய தயாரிப்பான Shahed drone எனப்படும் ஒருமுறை தாக்குதல் ட்ரோன்களை அடிக்கடி பயன்படுத்தி வருகிறது.
உக்ரைனுக்கு அனுபவம்
இவை இலக்கைத் தாக்கியவுடன் வெடிக்கும் தன்மையுடையவை. இத்தகைய ட்ரோன்களுக்கு எதிராகப் போராடிய அனுபவம் உக்ரைனுக்கு அதிகம் உள்ளதாகக் கருதப்படுகிறது.

“மத்திய கிழக்கில் நிலையை ஸ்திரப்படுத்தவும், உயிர்களைப் பாதுகாக்கவும் உக்ரைன் பங்களிக்க முடியும். எங்கள் கூட்டாளிகள் எங்களை அணுகி வருகின்றனர்,” என ஜெலன்ஸ்கி, எக்ஸ்(X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜெலன்ஸ்கியின் வாக்குறுதி
உக்ரைனின் பாதுகாப்புத் திறனை பாதிக்காத வகையில் உதவி வழங்கும் விருப்பங்களை இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் முன்வைப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
We continue to engage with the United States practically on a daily basis. For now, because of the situation with Iran, the necessary signals for a trilateral meeting haven't come yet. But as soon as the security situation and the broader political context allow us to resume the… pic.twitter.com/zkGmRCiWyW
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) March 4, 2026
“உக்ரைன் நிபுணர்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட நாடுகளில் பணியாற்றுவார்கள்; அணிகள் ஏற்கனவே ஒருங்கிணைப்பில் ஈடுபட்டுள்ளன.
பொதுமக்களைப் பாதுகாக்கவும், நிலையை ஸ்திரப்படுத்தவும், குறிப்பாக பிராந்தியத்தில் பாதுகாப்பான கடற்பயணத்தை மீட்டெடுக்கவும் நாங்கள் உதவத் தயாராக உள்ளோம்,” என உக்ரைன் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |