மூதூரில் இடம்பெற்ற 17 தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல்!
2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மூதூர் பட்டினிக்கு எதிரான சர்வதேச அமைப்பின் (Action against hunger) தன்னார்வ தொண்டாளர்கள் 17 பேரின் படுகொலைச் சம்பவத்தின் 20வது ஆண்டு நினைவேந்தல் மூதூரில் முன்னெடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று (08) காலை இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது உயிரிழந்த 17 தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களின் உருவப்படத்திற்கு மலர்தூவி, தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வு
அத்தோடு படுகொலை செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ நேசன், வைத்தியர் ஸ்ரீநாத் மற்றும் வேலன் சுவாமிகள், இந்து மத தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |