வலி வடக்கு மாவீரர் நினைவாலயத்தில் அஞ்சலி!
Tamils
Jaffna
Sri Lanka
By Theepan
யாழ். வலிகாமம் வடக்கு தெல்லிப்பழைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (21) மாலை ஆரம்பமானது.
இதன்போது மாவீரர் ஒருவரின் தாயாரால் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நினைவாலயத்தில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்டிருந்த, விடுதலைக்காக வித்தானவர்களின் நினைவுப் படங்களுக்குச் சுடரேற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நினைவேந்தலில் வலி வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி