இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு தலைநகரிலும் நினைவேந்தல்: முக்கிய திருப்புமுனை என்கிறார் சுமந்திரன்

Sri Lankan Tamils Colombo M A Sumanthiran Mullivaikal Remembrance Day
By Sathangani May 18, 2024 04:59 AM GMT
Report

'வடக்கு, கிழக்கில் போரின் இறுதிக் கட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருகின்ற இந்த வாரத்தில் தலைநகரிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவது என்பது தமிழ் மக்களின் வேதனையில் தெற்கு மக்களும் பங்குகொள்கின்றார்கள் என எண்ணத் தோன்றுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்தார்.

'யுத்தத்தில் பற்றியெரிந்த உள்ளங்களை ஆற்ற மனித நேய நட்பு ரீதியான கூட்டம்' எனும் தொனிப்பொருளில், இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நேற்று(17) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு: அமெரிக்கா நாடாளுமன்றில் வரலாற்று தீர்மானம்

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு: அமெரிக்கா நாடாளுமன்றில் வரலாற்று தீர்மானம்

போரில் மரணித்த அனைவருக்கும்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “கொடூரமான போரில் மரணித்த அனைவருக்காகவும் இந்த நிகழ்வை தலைநகரில் நடத்துவது மிகவும் ஒரு ஆரோக்கியமான திருப்புமுனை. 15 ஆண்டுகளின் பின்புகூட இப்படியான நிகழ்வு நடப்பது அது திருப்புமுனையின் ஆரம்பம் என்று நான் நினைக்கின்றேன்.

இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு தலைநகரிலும் நினைவேந்தல்: முக்கிய திருப்புமுனை என்கிறார் சுமந்திரன் | Commemoration In Colombo For The Dead Of Final War

2010ஆம் ஆண்டு முதலாவது நினைவு கூரல் எதிர் நோக்கியிருந்தபோதுதான் நான் முதலாவதாக நாடாளுமன்றத்துக்கு வந்து ஓர் உரையாற்றினேன்.

அந்தவேளையிலே கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அந்த ஆணைக்குழுவின் பரிந்துரை ஒரு குறித்த தினத்திலே தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்பது.

அம்பாறையில் இரு வேறு இடங்களில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி

அம்பாறையில் இரு வேறு இடங்களில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி

'அரகலய' போராட்டத்தில் அஞ்சலி

நாங்கள் வடக்கு - கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் என்றபடியால் அந்த யோசனையை வரவேற்றோம். அதிலே சேர்ந்து ஈடுபடுவோம் எனச் சொல்லியிருந்தோம். ஆனால், இதுநாள் வரைக்கும் நிகழவில்லை.

இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு தலைநகரிலும் நினைவேந்தல்: முக்கிய திருப்புமுனை என்கிறார் சுமந்திரன் | Commemoration In Colombo For The Dead Of Final War

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காலிமுகத்திடலிலே மக்களாக 'அரகலய' போராட்டத்தை நடத்தியபோது ஒரு நிகழ்வைச் செய்தார்கள். ஆனால், இன்றைக்கு மரணித்த அனைத்து இலங்கையர்களுக்குமாக இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.

வடக்கு, கிழக்கிலேயிருந்து மக்களுடைய நல்லெண்ணத்தை இந்த வேளையிலே உங்களிடத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். தங்களுடைய வேதனையிலே நீங்களும் பங்குகொள்கின்றீர்கள் என்பது அவர்களுக்கு ஒரு சிறு ஆறுதலை மனதிலே கொடுக்கும்“ என தெரிவித்தார்.

தமிழ் தேசியத்தின் அடையாள நாள் மே18: அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டு

தமிழ் தேசியத்தின் அடையாள நாள் மே18: அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011