ஈழத்தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு: அமெரிக்கா நாடாளுமன்றில் வரலாற்று தீர்மானம்

United Nations Sri Lankan Tamils Tamils United States of America Black Day for Tamils of Sri Lanka
By Thulsi May 18, 2024 10:40 AM GMT
Report

இலங்கையில் (srilanka) இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஈழத் தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரலாற்று தீர்மானம் ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றில் (United States) முன்வைத்துள்ளனர்.

அத்துடன் இலங்கை அரசு செய்த இனப்படுகொலைக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க காங்கிரஸின் (United States Congress) 7 உறுப்பினர்களுடன் இணைந்த நிலையில், அதன் ஒரு உறுப்பினரான வைல்லி நிக்கலினால் (Wiley Nickel) இலங்கையின் மோதலுக்கு ஒரு தீர்வாக ஈழத் தமிழர்களுக்கான சுதந்திர வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கும் இந்த முக்கிய தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

மே 18 மரணம் வரை மறக்க முடியாத வேதனை மிக்க நாள்...! கண்ணீருடன் பகிரும் அனந்தி சசிதரன்

மே 18 மரணம் வரை மறக்க முடியாத வேதனை மிக்க நாள்...! கண்ணீருடன் பகிரும் அனந்தி சசிதரன்

ஜனநாயக ரீதியில் நிரந்தர தீர்வு

H-RES 1230 என அழைக்கப்படும் இந்த தீர்மானம், ஈழத் தமிழர்களுடனான இராஜதந்திர வழிகளை வலுப்படுத்த அமெரிக்க நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு: அமெரிக்கா நாடாளுமன்றில் வரலாற்று தீர்மானம் | Us Congress Tamil Eelam Independence Referendum

அத்துடன் அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியில் நிரந்தர தீர்வைக் காண தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திர வாக்கெடுப்புக்கும் அழைப்பு விடுக்கிறது.

இலங்கையில் இனப்போர் முடிவடைந்த 15வது ஆண்டு நிறைவை ஒட்டிய இந்த தீர்மானம், தீவில் சிங்களவர்களும் தமிழ் மக்களும் தனித்தனியான இறையாண்மையை கொண்டிருந்த காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தை நினைவுபடுத்தியுள்ளது.

1833 இல் ஆங்கிலேயர்கள், ஒற்றை ஒற்றையாட்சி நிர்வாகத்தின் கீழ் சிங்கள மற்றும் தமிழ் பிரதேசங்களை இணைத்ததை இந்த தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்திற்கு சர்வதேச விசாரணையே தீர்வு

காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்திற்கு சர்வதேச விசாரணையே தீர்வு

இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்தம் 

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, சுதந்திரமான, இறையாண்மையுள்ள, மதச்சார்பற்ற தமிழீழத்தை மீட்டெடுப்பதற்காக, 1976 தமிழர்களின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அமெரிக்க தீர்மானம் குறிப்பிட்டுள்ளது.

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு: அமெரிக்கா நாடாளுமன்றில் வரலாற்று தீர்மானம் | Us Congress Tamil Eelam Independence Referendum

இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்தம் தமிழர்களுடன் எந்த ஆலோசனையும் இன்றி கொண்டு வரப்பட்டது என்ற அடிப்படையில், தமிழர்களின் அபிலாசைகளுக்கு அது தீர்வாக அமையாது என்று தமிழர்களின் தலைவர்கள்,அதனை நிராகரித்ததையும் இந்த தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையின் 6 வது திருத்தம் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாகவும், தமிழர்களின் தாயகம் சுயராஜ்யமற்ற பிரதேசமாகவே உள்ளது என்றும் தீர்மானம் கூறுகிறது.

காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட தீர்மானம்

2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அப்போதைய தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறைமுகமாக அங்கீகரித்ததை இந்த தீர்மானம் மேற்கோள் காட்டியுள்ளது.


திமோர், பொஸ்னியா, எரித்திரியா மற்றும் கொசோவோ ஆகிய நாடுகளில், அந்தந்த மோதல்களைத் தீர்ப்பதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் சுதந்திர வாக்கெடுப்புகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதையும் காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.

தீர்மானத்தின் முதன்மைக் கோட்பாடு

இந்தநிலையில் தீர்மானத்தின் முதன்மைக் கோட்பாடுகளாக

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு: அமெரிக்கா நாடாளுமன்றில் வரலாற்று தீர்மானம் | Us Congress Tamil Eelam Independence Referendum

1. ஈழத் தமிழர்களுடனான இராஜதந்திர வழிகளை வலுப்படுத்த அமெரிக்காவை வலியுறுத்துதல்

2. தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிச் செயல்படுமாறு அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்துதல்

3. இலங்கை செய்த தமிழ் இனப்படுகொலையை அங்கீகரித்தல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.   

உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் மண்: அஞ்சலி செலுத்திய சர்வதேச மன்னிப்புச்சபை செயலாளர் நாயகம்

உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் மண்: அஞ்சலி செலுத்திய சர்வதேச மன்னிப்புச்சபை செயலாளர் நாயகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026