உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் மண்: அஞ்சலி செலுத்திய சர்வதேச மன்னிப்புச்சபை செயலாளர் நாயகம்
தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றதில் 10:30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
இந்த அஞ்சலி நிகழ்வில் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் (Agnès Callamard ) கலந்து கொண்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளார்.
மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம்
முள்ளிவாய்க்கால் மண்ணிலே முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் பொதுக் கட்டமைப்பினால் நினைவு பேருரை ஆற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் யுத்தத்திலே கணவனை இழந்த முள்ளியவளையை சேர்ந்த கோவிந்தராசன் புனிதவதி பொதுச்சுடரினை ஏற்றி வைக்க ஏனைய உறவுகளும் தங்களுடைய உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின் போது உயிர்நீத்த உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.
இதன்போது பொதுச்சுடர் மற்றும் நினைவுச்சுடர்களும் ஏற்றப்பட்டன.
அத்துடன் ஆயிரக்காண பொது மக்கள் கலந்து கொண்டு உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
இறுதிப் போரிலே பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் மே 18 நினைவேந்தல் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி மக்களால் இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முல்லைத்தீவு (Mullaitivu) - முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இன்று (18.5.2024) அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
15ஆவது ஆண்டாக இன்று முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல இடங்களில் இறுதிப்போரில் உயிர் நீத்தவர்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்படுகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டு வலி மிகுந்த வரலாற்றின் சாட்சியான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஆண்டுதோறும் உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் உணர்வு உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |