திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவேந்தல்
Trincomalee
By H. A. Roshan
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் நினைவேந்தல் நிகழ்வு , திருகோணமலை கிழக்கு ஆளுனர் செயலகத்துக்கு அருகாமையில் இன்று நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது 2006.01.24 அன்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் உருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஜனநாயக ரீதியாக செயற்பட்ட ஊடகர்களுக்கான, படுகொலைகளுக்கான நீதியை நிலை நாட்ட வேண்டும். உள்ளக பொறிமுறை அல்லது சர்வதேச பொறிமுறை ஊடாகவோ நீதியை வழங்க வேண்டும் எனவும் இதன் போது கருத்து தெரிவிக்கப்பட்டது.





| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்