ஊடகவியலாளர் தேவராசாவின் 39-வது ஆண்டு நினைவேந்தல்
Batticaloa
Eastern Province
By Bavan
கடந்த 1985 ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசா 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 25.12.2025 திகதி காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் க.சரவணன் தலைமையில் கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் செயலாளர் உ.உதயகாந்த் (ஜே.பி) ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மலர் அஞ்சலி
இதன் போது மறைந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசா திருவுருவப் படத்திற்கு அன்னாரின் உறவினரான அக்கரைப் பாக்கியனால் மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் உறுப்பினர்களால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்