அளம்பில் துயிலுமில்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்நாள் நினைவேந்தல்
Mullaitivu
Maaveerar Naal
By Dharu
மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையின் மத்தியிலும் முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.
இந்த மாவீரர் நாள் நினைவேந்தலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் சரியாக 06.5மணிக்கு மணிஓசை எழுப்பப்பட்டதுடன் மாவீரர்களுக்கான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
அந்தவகையில் பொதுச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தாயாரான பண்டியன் ஞானஉதயம் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மாவீரர்நாள் நினைவேந்தல் செயற்பாடுகள் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டன.


விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்