கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலை இலங்கையிலும் ஏற்படும் : எச்சரிக்கும் சிறீதரன்

Sri Lanka Kerala India
By Shalini Balachandran Aug 08, 2024 08:55 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

கேரள (Kerala) மாநிலத்திலுள்ள வயநாடு (Wayanad) கிராமம் அழிவடைந்ததை போன்று இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பொன்னாவெளி, கௌதாரிமுனை கிராமமும் அழிவடைந்து, இலங்கையின் வரைபடத்தில் இருந்து இல்லாமல் போகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் (S. Sridharan) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பேரழிவை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் நேற்று (07) இடம்பெற்ற அரையாண்டின் அரசிரை நிலைப்பாட்டு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

மனிதனின் கண்டுபிடிப்புகள்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவின் கேரள மாநிலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்ந்த வயநாடு தற்போது காணாமல் போயுள்ளது 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களை காணவில்லை.

கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலை இலங்கையிலும் ஏற்படும் : எச்சரிக்கும் சிறீதரன் | Comment In Parliament On Wayanad Landslide

ஒரே இரவில் நடந்த அனர்த்தத்தில் ஒரு ஊரே காணாமல் போயுள்ளதுடன் ஊரை காணவில்லை இங்கிருந்த மக்களை காணவில்லை என கதறி அழுதார்கள் இணையத்தளங்களில் பார்த்தேன் மனிதனின் கண்டுபிடிப்புகள் இங்கே தோற்றுப்போயுள்ளன.

இயற்கை பேரழிவுக்கு முன்னால் மனிதன் மண்டியிட்டு கிடக்கின்றான் என்பதையே இந்த சம்பவம் எமக்கு பாடமாக காட்டியுள்ளது அத்தோடு சாதி மதம் இன்றி ஊர் கடந்து எந்த வேறுபாடுகளும் இன்றி உதவுகின்ற மக்களை பார்க்கின்றோம்.

வாட்ஸ்அப்பில் AI தொழில்நுட்பம் : அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப்பில் AI தொழில்நுட்பம் : அறிமுகமாகும் புதிய அம்சம்

வயநாடு நிலைமை

முண்டக்கை,சூரல்மலை உள்ளிட்ட சில கிராமங்களையும் காணவில்லை, தாயை காணவில்லை மற்றும் தந்தையை காணவில்லை என்று பிள்ளைகள் கதறுவதை பார்க்கும் போது மனம் வெதும்பியது இது இயற்கை பேரிடராகும்.

கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலை இலங்கையிலும் ஏற்படும் : எச்சரிக்கும் சிறீதரன் | Comment In Parliament On Wayanad Landslide

இந்த நிலைமைகளை பார்க்கும் போது 2008 மற்றும் 2009 காலப்பகுதியில் எமது மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு சென்ற போது நேர்ந்தவையே விடயங்களே எனக்கு நினைவுக்கு வந்தது அத்தோட வயநாடு நிலைமை இயற்கையானது ஆனால் இங்கே நடந்தது செயற்கையானது.

மிகப்பெரிய மனித பேரவலத்தை சந்தித்தவர்களாக ஈழத் தமிழர்கள் உள்ளனர் தொடர்ந்தும் இந்த நாட்டில் நடக்கும் விடயங்களை கூறாமல் இருக்க முடியாது தீர்வு காண்போம் ஒற்றுமையாக இருப்போம் என்றெல்லாம் வெறும் வாய் பேச்சாகவே கூறுகின்றனர் இதேவேளை கிளிநொச்சி பூனகரி பிரதேச செயலாளர் பிரிவில் பொன்னாவெலியில் உள்ள முருங்கை கற்களை தோண்டியெடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது.

சற்றுமுன்னர் வெளியானது தமிழ் பொதுவேட்பாளரின் பெயர்

சற்றுமுன்னர் வெளியானது தமிழ் பொதுவேட்பாளரின் பெயர்

பாதுகாக்க நடவடிக்கை 

தமிழ் அமைச்சர் ஒருவர் அந்தக் கற்களை தோண்டியெடுப்பதில் கவனமாக இருக்கின்றார் இயற்கையின் அனர்த்தம் ஆரம்பிக்கின்றது கேரளா வயநாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தை செயற்கையாக செய்வதற்கு இந்த அமைச்சரும் அரசாங்கமும் பொன்னாவெளி கிராமத்தில் காத்திருக்கின்றனர்.

அதனை அண்மித்த கிராமங்களில் உள்ள மக்கள் அந்த முருங்கைக் கற்களை பாதுகாப்பதற்காக போராடுகின்றனர் ஒரு வருடம் கடந்தும் அது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை அதேவேளை கௌதாரிமுனையில் மக்கள் ஆறு வருடங்களுக்கு முன்னர் மக்கள் போராடினர்.

கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலை இலங்கையிலும் ஏற்படும் : எச்சரிக்கும் சிறீதரன் | Comment In Parliament On Wayanad Landslide

மண் மேடுகளை அள்ள வேண்டாம் என்றும் கோரினர் அந்த பிரதேசத்தை வரைபடத்தில் இருந்தே இல்லாமல் போகுமளவுக்கு நீதித்துறையே அனுமதி வழங்கியுள்ளதென்றால் நீதி தராசு எங்குள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.

இயற்கையை காப்பாற்ற மக்கள் போராடினர் இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பொன்னாவெளி கிராமமும் மற்றும் கௌதாரிமுனை கிராமமும் இலங்கையின் வரைபடத்தில் இருந்தே காணாமல் போகப் போகின்றது இந்த இரண்டு கிராமங்களையும் காப்பாற்ற வேண்டும் அங்குள்ள இயற்கைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இங்கேயும் ஒரு வயநாடு உருவாகி விடக்கூடாது என்று உயரிய சபையில் வலியுறுத்துகின்றேன்"என அவர் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா: போக்குவரத்து தொடர்பில் வெளியான தகவல்

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா: போக்குவரத்து தொடர்பில் வெளியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

05 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Neuss, Germany

06 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரிஸ், France

30 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

06 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வவுனிக்குளம், Toronto, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கல்வியங்காடு, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Brampton, Canada

25 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025