நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா: போக்குவரத்து தொடர்பில் வெளியான தகவல்
யாழ்(Jaffna) நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நடவடிக்கையானது நாளை (04) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் குறித்த போக்குவரத்து தடையானது எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி மாலை வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும்.
யாழ் மாநகர சபை
அதன்படி, வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை (Point Pedro) வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும்.
குறிப்பாக, இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது, வீதித்தடைகளை அமைப்பது தொடர்பாக இன்று (07) துறைசார் அதிகாரிகளால் களவிஜயம்
மேற்கொள்ளப்பட்டது.
மேலும், யாழ் மாநகர ஆணையாளர் என்.கிருஷ்ணேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் காளிங்க ஜெயசிங்க உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், மாநகர சபை அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |