வங்குரோத்து நிலையிலிருந்து மீள நாட்டின் தலைவரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் : சஜித்
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பில், பெரும் செல்வந்தர்களையும் மற்றும் கோடீஸ்வரர்களையும் காப்பாற்றிவிட்டு நாட்டில் உழைக்கும் மக்களின் நலனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (02) நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் “விழுமியம் மிக்க சமூகத்துக்கான பிக்குகள் ஆலோசனை பேரவையின்” குருநாகல் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மைய தினத்தில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து நாட்டில் மாற்றங்கள் நடந்து உடன்பாட்டில் திருத்தங்களைச் செய்து அதன் மூலம் நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும் என தெரிவித்தோம்.
பெரும் செல்வந்தர்
இந்த செயன்முறையில் தியாகங்களைச்
செய்யும் போது அனைவரும் அந்த தியாகத்தைச் செய்ய வேண்டும் முதல் தியாகத்தை
அரச தலைவரே செய்ய வேண்டும்.
அவர் நாட்டுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் ஆனால் எமது நாட்டில் அதன் மறுபக்கமே நடந்ததுள்ளது அத்தோடு உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பில் பெரும் செல்வந்தர்களையும் மற்றும் கோடீஸ்வரர்களையும் காப்பாற்றிவிட்டு இந்நாட்டில் உழைக்கும் மக்களின் நலனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில், பெரும் செல்வந்தர்கள் பணக்காரர்கள் என சகலரும் இந்த தியாகத்தைச் செய்ய வேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |