மத்திய கிழக்கில் போர் பதற்றம்: லெபனானுக்கு செல்ல வேண்டாம் - இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் (srilankan) லெபனானுக்கு செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (ali sabry) தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலையின் காரணமாக மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்து வருவதால் அத்தியாவசிய வேலைகள் தவிர வேறு எதற்காகவும் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
நிலவும் பதட்ட நிலை
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார்நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
லெபனானில் சுமார் 6,000 இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விரைவில் வெளியேற வேண்டும்
இஸ்ரேலுக்கும்(israel) ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் லெபனானில்(lebonan) உள்ள தமது பிரஜைகளை உடன் வெளியேறுமாறு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
இந்த நிலையில், அவுஸ்திரேலியர்கள் லெபனானில் இருந்து விரைவில் வெளியேற வேண்டும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேபோன்று அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவும் இதே கோரிக்கையை தங்கள் நாட்டு மக்களிடம் விடுத்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |