அநுர அரசின் அதிரடி : சிக்கப்போகும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்

Parliament of Sri Lanka Prasanna Ranatunga Money Nalinda Jayatissa
By Sathangani Feb 12, 2025 03:47 AM GMT
Report

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொத்து சேதம் தொடர்பில் பெற்றுக் கொண்ட இழப்பீடுகள் மற்றும் அதற்காக முன்னெடுக்கப்பட்ட மதிப்பீடுகள் தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய விரைவில் இது குறித்த முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நேற்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தீயாய் பரவும் தையிட்டி விகாரை விவகாரம் : கஜேந்திரகுமாரிற்கு நீதிமன்றம் அழைப்பாணை

தீயாய் பரவும் தையிட்டி விகாரை விவகாரம் : கஜேந்திரகுமாரிற்கு நீதிமன்றம் அழைப்பாணை

சொத்துக்கள் தொடர்பில் மதிப்பீடு 

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ”இவ்வாறான பாதிப்புக்களுக்கு இழப்பீடு வழங்குவது எங்கும் குறிப்பிடப்படவில்லை. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நபரொருவருக்கு வழங்கப்படக் கூடிய அதிகபட்ச இழப்பீட்டு தொகை 25 இலட்சம் மாத்திரமே.

அநுர அரசின் அதிரடி : சிக்கப்போகும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் | Compensation Received By Ex Ministers And Mps

ஆனால் இந்த சம்பவத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பில் மதிப்பீடு செய்வதற்காக பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மதிப்பீட்டாளர்கள் குழு, அப்போதைய ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாக செயற்பட்ட பிரசன்ன ரணதுங்கவால் (Prasanna Ranatunga) 2022ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது, பாதிக்கப்பட்ட நபரால் மதிப்பீட்டு குழுவை அழைத்து ஆலோசனை பெறவோ வழங்கவோ முடியாது.

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆளுங்கட்சியின் எம்.பி.க்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்தமையால் மதிப்பீட்டாளர்கள் இவ்வாறு நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் துண்டிப்பு: அநுர அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் துண்டிப்பு: அநுர அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கை

வெளியாகவுள்ள அறிக்கை

இழப்பீட்டு மதிப்பீடுகளின் போது தாம் பாரிய அழுத்தங்களுக்கு உள்ளானதாக அப்போதைய பிரதேச செயலாளர்கள் பலர் குறிப்பிட்டிருந்தனர்.

அவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டு, செலுத்தப்பட்ட இழப்பீடு தொடர்பான பட்டியலையே நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளேன். 5 இலட்சம் தொடக்கம் 90 இலட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது.

அநுர அரசின் அதிரடி : சிக்கப்போகும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் | Compensation Received By Ex Ministers And Mps

இந்த பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் மாத்திரமே உள்ளடங்குகின்றனர். ஆனால் இன்னும் பிரதேசசபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் பலரும் இவ்வாறு இழப்பீடுகளைப் பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் சார்பிலும் இது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய இது குறித்த முழுமையான அறிக்கை விரைவில் வெளியிடப்படும்” என தெரிவித்தார்.

பாரிய அதிர்வலையை கிளப்பியுள்ள தையிட்டி விகாரை விவகாரம் : கொந்தளிக்கும் தமிழ் எம்.பிக்கள்

பாரிய அதிர்வலையை கிளப்பியுள்ள தையிட்டி விகாரை விவகாரம் : கொந்தளிக்கும் தமிழ் எம்.பிக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019