மகிந்த அரசாங்கத்தின் முன்னாள் எம்.பிக்கு எதிராக சி.ஐ.டியில் முறைபாடு

Law and Order Arun Hemachandra
By Dharu Aug 05, 2026 12:54 AM GMT
Report

முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே, 2008ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வந்த அரச உத்தியோகபூர்வ இல்லத்திற்கான வாடகை, நீர் கட்டணம் மற்றும் மின்சார கட்டணம் எதனையும் செலுத்தவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

அரசியல் நடவடிக்கைகளுக்காக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு வந்த முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன (பொஹொட்டுவ) கட்சி உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே குறித்த இந்த குற்றச்சாட்டை நேற்று (04.08.2026) நாடாளுமன்றத்தில் அருண் ஹேமச்சந்திரா முன்வைத்தார்.

இந்த நிலுவைத் தொகைகளை மீளப் பெறுவதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களும் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், இதுவரை எந்தவொரு தொகையும் செலுத்தப்படவில்லை எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான 5 ஊழல் வழக்குகள்! ஆரம்பமாகும் விசாரணை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான 5 ஊழல் வழக்குகள்! ஆரம்பமாகும் விசாரணை

திருட்டு, மோசடி மற்றும் ஊழல்கள்

இதனால், இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் (CID), அரச கணக்குகள் பற்றிய குழுவான கோபா குழுவிற்கும் (COPE) ஒப்படைக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிந்த அரசாங்கத்தின் முன்னாள் எம்.பிக்கு எதிராக சி.ஐ.டியில் முறைபாடு | Complaint Filed Against Susantha Punchinilame Cid

மேலும், முன்னாள் மாகாண சபை உறுப்பினராக இருந்த பிரியந்த பத்திரண பிரேமகுமார என்பவருக்கும் பேதுருகொட்டுவ பகுதியில் அரச உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதற்கான வாடகை எதுவும் செலுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் திருட்டு, மோசடி மற்றும் ஊழல்களுக்கு இடமளித்து அவற்றை கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், அரச அதிகாரிகள் தமது கடமைகளை நிறைவேற்ற முயன்ற போதிலும் அரசியல் அதிகாரம் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் பிரதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

நீதித்துறை மீதான அரசியல் ஆதிக்க நகர்வு! மகிந்தவுக்கு இன்றைய பின்னடைவு

நீதித்துறை மீதான அரசியல் ஆதிக்க நகர்வு! மகிந்தவுக்கு இன்றைய பின்னடைவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026