எரிபொருள் விலை உயர்வு : மக்களுக்கு நற்செய்தி
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
National Fuel Pass
By Jaso
இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள எரிபொருள் விலை மீளாய்வின்போது விலைகள் உயர்த்தப்படாது என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக இன்று(21) உறுதியளித்தார்.
ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அறிவித்தவாறு, எரிபொருள் விலையில் சலுகை ஒன்றை வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.
எரிபொருள் விலையில் சலுகை
அந்தச் சலுகையின் அளவு குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பொதுமக்களின் மீதான நிதிச் சுமையைக் குறைப்பதற்காக ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அரசாங்கம் ஏற்கனவே எரிபொருள் விலையில் சலுகைகளை வழங்கியிருந்ததை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி