ரணிலின் கைதுக்கு எதிராக ஐ.நாவிலேயே முறைப்பாடு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுத்துப்பூர்வ முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடானது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கவிந்த ஜயவர்தன மற்றும் மயந்த திசாநாயக்க ஆகியோரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச் சபையில் இந்தப் முறைப்பாட்டை சமர்ப்பிக்கும் நோக்கில், இன்று (23) கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அடக்குமுறை
அந்த முறைப்பாட்டில் தற்போதைய அரசாங்கம் அரசியல் அடக்குமுறையை செயல்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டை ஒப்படைத்த பின்னர் ஊடகங்களுக்கு பேசிய காவிந்த ஜெயவர்தன, “இந்த அரசாங்கம் மிகவும் ஜனநாயக விரோதமான முறையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு சிறந்த உதாரணம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை.” என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
