தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரணில்..! வெளியாகியுள்ள புகைப்படம்
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வயது மற்றும் பரிசோதனை முடிவுகளைக் கருத்தில் கொண்டு, முதல் 24 மணி நேரத்திற்கு அவரை உன்னிப்பாகக் கண்காணிப்பில் வைத்திருக்க சிறப்பு வைத்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.
எனவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனா தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை பரிசோதித்த சிறைச்சாலை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க, நேற்று (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதி
உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் சிறைச்சாலை மருத்துவர்கள், அவருக்கு வீட்டிலிருந்தே உணவு வழங்கவும் பரிந்துரைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 5 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
4 நாட்கள் முன்