விவசாயிகளுக்கு புதிய சலுகை: வெளியான மகிழ்ச்சித் தகவல்
விவசாய அமைச்சு, விவசாயிகளின் பயிர் செய்கைகளுக்கான இடர் மேலாண்மை முறையை சீரமைத்து, புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சலுகைமிக்க காப்பீட்டு திட்டம் சோளம், பச்சைப்பயறு, தட்டைப்பயறு(கௌபி), வேர்க்கடலை, குரக்கன், எள்ளு, கொள்ளு போன்ற பயிர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு ஏக்கர் தட்டைப்பயறு செய்கைக்காக ரூ.4,200 காப்பீட்டு தொகை செலுத்தும் விவசாயிக்கு, இயற்கை அனர்த்தங்கள், நோய்கள், பூச்சிகள் மற்றும் காட்டு யானைகள் போன்றவற்றால் சேதம் ஏற்பட்டால் ஏக்கருக்கு ரூ.60,000 வரை இழப்பீடு வழங்கப்படும்.
மானியக் காப்பீட்டு திட்டம்
இதேவேளை, பச்சைப்பயறு செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.5,600 காப்பீடு செலுத்தும் பட்சத்தில், சேதம் ஏற்பட்டால் ரூ.80,000 வரை இழப்பீடு பெறலாம் என அமைச்சசு தெரிவித்துள்ளது.
காட்டு யானை அச்சுறுத்தல் அதிகம் உள்ள மாவட்டங்களில் பயிர்கள் சேதமடையும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்த மானியக் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
