ரணிலின் தொலைபேசி அழைப்பு: வெளியானது குரல் பதிவு!
கைது செய்யப்படுவதற்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதியாக வழங்கிய அறிக்கையின் குரல் பதிவை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் அகில விராஜ் காரியவசம் வெளியிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது இது வெளியிடப்பட்டுள்ளது.
ரணிலின் குரல் பதிவு
குறித்த குரல் பதிவில் ரணில், "நான் எப்போதும் நாட்டிற்காகவே உழைத்திருக்கிறேன்.நான் தனிப்பட்ட காரணங்களுக்காக உழைத்ததில்லை. இந்த ஆட்சியின் உண்மை முகம் இப்போது வெளிவருகிறது.
எல்லா இடங்களிலும் நடைபெறும் இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை." எனத் தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்
இவ்வாறானதொரு பின்னணியில், அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டு 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயக மீறல்களையும், அரசியல் பழிவாங்கல்களையும் இனியும் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை எனவும் சகல கட்சிகளுடனும் இணைந்து ஜனநாயக போராட்டத்தை ஆரம்பிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 5 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
4 நாட்கள் முன்