முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் பாதையில் முழுமையான கடையடைப்பு
Sri Lankan Tamils
Kilinochchi
Mullaitivu
Mullivaikal Remembrance Day
By Sathangani
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான இன்று முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் பாதையில் கிளி - முல்லைத்தீவு மாவட்ட வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகரம், விசுவமடு பிரதேசம் ஆகியவற்றில் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வீதி நெடுகிலும் கூடாரங்கள் அமைக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுகின்றது.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு நாளின் பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று (18) காலை 10.15 அளவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - பா.பிரியங்கன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்