நேட்டோவை அச்சுறுத்தும் ரஷ்யா: போருக்கு முன்னாயத்தமாகும் ஜெர்மனி
ஜெர்மனியில் தற்போது சுமார் 1,82,000 ராணுவத்தினர் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால் நேட்டோ உறுப்பினரான நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகரித்து வருவதாக ராணுவத் தலைவர் கார்ஸ்டன் ப்ரூயர் சமீபத்தில் எச்சரித்ததைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்புத் திறனை பலப்படுத்தும் முயற்சியில் ஜெர்மனி முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, கட்டாய ராணுவ சேவை முறையை மீண்டும் அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சட்டமூல நிறைவேற்றம்
இந்த புதிய முறையில், 18 வயதை கடந்த அனைத்து குடிமக்களும் ராணுவ சேவைக்குத் தகுதியுள்ளவர்களா என்பதை மதிப்பிட மருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

ராணுவ சேவை ஆண்களுக்கு கட்டாயமாக இருக்கும் போது, பெண்களுக்கான சேவை விருப்ப அடிப்படையில் வழங்கப்படும் என்று அரசு விளக்கியுள்ளது.
இந்த தொடர்பான சட்டமூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவசியமான முடிவு
திட்டம் நிறைவேற்றப்பட்டால், அடுத்த 10 ஆண்டுகளில் ஜெர்மனி தனது ராணுவப்படையை 2,60,000 வீரர்களாக அதிகரிக்க இலக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டாய ராணுவ சேவைத் திட்டம் அரசியல் விவாதத்தையும் தூண்டியுள்ளது.

குறிப்பாக இடதுசாரி கட்சிகள், இது சமூகத்துக்கு தேவையற்ற அழுத்தம் தரக்கூடியது என்று வாதித்து கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன.
இருப்பினும், ரஷ்யாவின் அச்சுறுத்தல் கருத்தில் கொள்ளப்படும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த இது அவசியமான முடிவாக அரசாங்கம் வலியுறுத்துகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்