நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் கூறுங்கள் - எரிபொருள் விலை அதிகரித்த உடன் வெளிவந்த கடும் கண்டனம்
sajith
fuel
condemnation
By Sumithiran
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைகளை அறிவித்த சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அரசாங்கத்தைத் கடுமையாக சாடியுள்ளார்.
“பொதுஜனபெரமுன அரசாங்கத்தின் மீது வெட்கமாக இருக்கிறது. நீங்கள் ஒரு தேசிய அவமானம். நீங்கள் நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் கூறுங்கள். “ஐக்கிய மக்கள் சக்தி செழிப்பு மற்றும் வளர்ச்சியின் சகாப்தத்தை உருவாக்கும் ”என்று அவர் டுவீட் செய்துள்ளார்.
அரசாங்கம் எரிபொருள் விலையை நள்ளிரவில் இருந்து குறைந்தது 6% முதல் 14% வரை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்