தீபச்செல்வன் மீதான அச்சுறுத்தல் குறித்து தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் கண்டனம்

Sri Lankan Tamils Kilinochchi Government Of Sri Lanka
By Sathangani Apr 15, 2024 09:16 AM GMT
Report

தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம்மீது இரும்புக்கரங்களால் ஒடுக்குமுறை இடம்பெறுவது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு வடிவமே என தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் சாடியுள்ளது.

இதேவேளை புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தமைக்காக கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டமையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

தமிழர்கள் பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை அடையாளம் காணவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன் பகிரங்கம்

தமிழர்கள் பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை அடையாளம் காணவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன் பகிரங்கம்


கருத்துச் சுதந்திரம்மீது இரும்புக்கரம்         

சுதந்திரம் என்பது மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தின் 19 வது பிரிவில் உள்ள அடிப்படை மனித உரிமையாகும்.

ஆனால் அதைத் தடுக்க பல வழிகளைக் கண்டுபிடித்து தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கிவரும் சிறிலங்கா அரசாங்கம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழர் தாயகத்தில் தெடர்ச்சியாக கருத்துச் சுதந்திரத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவதை கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு வடிவமாகவே தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் பார்க்கின்றது.

தீபச்செல்வன் மீதான அச்சுறுத்தல் குறித்து தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் கண்டனம் | Condemnation Of Threat Against Theepachelvan

சிறிலங்கா அரசினது மோசமான அரச வன்முறைகளையும் அரசின் மோசமான கொள்கைகளையும் விமர்சிப்பதைத் தடுக்கும் வகையில் அண்மையில் நிகழ்நிலை காப்புச் சட்டம் ஒன்றினைக் கொண்டுவந்தது சிறிலங்கா அரசாங்கம்.

இது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்திற்கு அப்பால் ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாளி தனது படைப்பு ஒன்றினை வெளியீடு செய்ய முடியாத மிக மோசமான நிலையே காணப்படுகின்றது.

தமிழ் பொது வேட்பாளர் - காலத்தின் தேவை: சிறீதரன் எம்.பி..!

தமிழ் பொது வேட்பாளர் - காலத்தின் தேவை: சிறீதரன் எம்.பி..!


தீபச்செல்வனிடம் விசாரணை

அந்தவகையில்தான் அண்மையில் புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தமைக்காக தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரான தீபச்செல்வனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனின் 34 நாட்களில் நீந்திகக் கடந்த நெருப்பாறு என்ற புத்தகம் எழுத்தாளர் தீபச்செல்வன் தலைமையில் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தீபச்செல்வன் மீதான அச்சுறுத்தல் குறித்து தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் கண்டனம் | Condemnation Of Threat Against Theepachelvan

கிளிநொச்சியின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதனை மதிப்பளிப்பு செய்யும் நோக்கிலேயே குறித்த நூல் வெளியீட்டு விழா நடத்தப்பட்ட போதிலும் இறுதி யுத்த அவலங்களை அம்பலப்படுத்தியே நூல் எழுதப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சுமார் இரண்டரை மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த புத்தக வெளியீட்டினை நடாத்தியமை தொடர்பாகவே தன்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த புத்தகம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்கில் எழுதப்பட்டதா என்றும் விசாரணையின் போது தன்னிடம் கேட்கப்பட்டதாக தீபச்செல்வன் கூறியுள்ளார்.

நடுகல், பயங்கரவாதி, நான் சிறிலங்கன் இல்லை போன்ற நூல்கள் வாயிலாக உலகறியப்பட்ட தீபச்செல்வன், இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத் தமிழ் இனத்தின் பாடுகளையும் நீதிக்கான ஏக்கங்களையும் தன் எழுத்துக்களில் பேசிவருவதுடன், ஒரு ஆசிரியராகவும் கடமையாற்றி வருகிறார். மாபெரும் அச்சுறுத்தல் களத்திலும் துணிந்து குரல் கொடுக்கும் ஒரு எழுத்தாளனின் குரலை நசுக்கவே இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 244 பேர் கைது!

கடந்த 24 மணி நேரத்தில் 244 பேர் கைது!


43 ஊடகவியலாளர்கள் படுகொலை

முள்ளிவாய்க்காலில் தமிழ் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகத்தில் தீவிரம் பெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புகள் மற்றும் எமது சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் என பலரும் தொடர்ந்து விசாரணைக்கு அழைக்கப்படுவதும், கடுமையாக அச்சுறுத்தப்படுவதும் தொடர்கதை ஆகிவிட்டது.

அவ்வகையில்தான் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் மீதும் அவரை அச்சுறுத்தும் வகையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிறிலங்கா அரசானது யுத்த காலத்திலும் சரி யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் சரி கருத்துச் சுதந்திரத்தின் மீது மிக மோசமான வன்முறையை ஏவிவருகின்றது.

தீபச்செல்வன் மீதான அச்சுறுத்தல் குறித்து தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் கண்டனம் | Condemnation Of Threat Against Theepachelvan

அதன் வெளிப்பாடாகத்தான் யுத்த காலத்தில் 43 ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தக் கொலைகளை ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் கண்டித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தியிருந்தால் இன்று யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான அடக்குமுறைகள் தொடர்ந்திருக்காது.

எனவே தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவருவது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு வடிவமே என  சுட்டிக்காட்டுவதோடு புத்தக வெளியீட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தமைக்காக கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டமையையும் தமிழ்த்தேசிய அவதானிப்பு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இரு குழுக்களுக்கிடையே மோதல் : அதிகாலையிலே வாகனங்கள் தீக்கிரை

யாழில் இரு குழுக்களுக்கிடையே மோதல் : அதிகாலையிலே வாகனங்கள் தீக்கிரை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026