சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

Sri Lanka Politician Sri Lanka Government Political Development
By Pavi Oct 16, 2026 08:04 AM GMT
Report

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரத்திற்கான நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்காக நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இன்று (16.10.2026) நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடியது.

இதன்போது, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு ஆளும் கட்சி முன்மொழிந்திருந்தது.

காவல்துறை பேருந்து வந்தவுடன் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்! முடிவுக்கு வருகிறது ஞானசார ஆதரவு போராட்டம்

காவல்துறை பேருந்து வந்தவுடன் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்! முடிவுக்கு வருகிறது ஞானசார ஆதரவு போராட்டம்

நம்பிக்கையில்லாப் பிரேரணை

எனினும், சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் 50 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், அதனை விவாதிப்பதற்கு ஒருநாள் போதுமானதாக இருக்காது என எதிர்க்கட்சி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு | Confidence Motion Against Adjourned Indefinitely

அதேவேளை, குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சில சட்டரீதியான தொழில்நுட்பப் பிரச்சினைகள் காணப்படுவதால், அது தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தைப் பெற வேண்டியுள்ளதாக ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.

இதற்குச் சில காலம் தேவைப்படும் என்பதால், எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்த முடியாது என நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்த பின்னர், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கெதிராக பாய்ந்த ரணிலின் சட்டம்

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கெதிராக பாய்ந்த ரணிலின் சட்டம்

ரஷ்யாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016