நாட்டில் 15 பயங்கரவாத அமைப்புகளின் சொத்துக்கள் முடக்கம்: வெளியானது அறிவிப்பு
பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புக்கள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கட்டளையின் பிரகாரம் இந்த நாட்டில் 15 பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 210 பேரின் நிதி, ஏனைய நிதி சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத செயற்பாடுகள்
இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் (L.T.T. E) , தமிழர் மறுவாழ்வு அமைப்பு (T.R.O), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (T.C.C), உலகத் தமிழர் இயக்கம் (W.T.M), நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (T.G.T.E) , உலகத் தமிழர் நிவாரண நிதி (W.T.R.F), தலைமையக குழு (HQ Group) 8. தேசிய தௌஹீத் ஜமாத் (N.T.J), ஜமாதே மில்லாதே இப்ராஹிம் (ஜே.எம்.ஐ.) , வில்லயாத் அஸ் செலானி (W.A.S S), கனடியத் தமிழ் தேசிய கவுன்சில் (N.C.C.T), தமிழ் இளையோர் அமைப்பு (T.Y.O), தாருல் அதர் அத்தபாவிய்யா, இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் (S.L.I.S.M), முத்துக்களை காப்பாற்றுங்கள் போன்ற 15 அமைப்புகளின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு பணம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 113 பேரின் பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2019 ஏப்ரலில் 270 க்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் கொன்ற ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தாக்குதலின் பின்னணியில் ISIS உடன் தொடர்புடையதாக நம்பப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் ( (NTJ) இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 7 மணி நேரம் முன்
