வடமாகாண ஆளுநர் செயலகத்தில் முரண்பாடு: ஒருவர் படுகாயம்
Jaffna
Northern Province of Sri Lanka
P. S. M. Charles
By Laksi
வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற முரண்பாட்டில் பணியாளர் ஒருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழில் உள்ள தலைமை செயலகத்தில் அலுவலக பணியாளர் ஒருவருக்கும் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாய்த்தர்க்கம்
இதன்போது வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் சுத்திகரிப்புப் பணியாளர் அலுவலக பணியாளரை தாக்கியதையடுத்து அலுவலகப் பணியாளர் காயமடைந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆளுநர் செயலக பணியாளர் யாழ் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
கழுத்துப் பகுதியில் காயம்
இதனையடுத்து காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பிரகாரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி