இஸ்ரேல் மீதான தாக்குதல் : ஈரான் ஜனாதிபதி : புரட்சிகாவல் படை இடையே வெடித்தது மோதல்
இஸ்ரேலுடனான (israel)போரைத் தடுக்க ஈரானின்(iran) புதிய அதிபர் மசூத் பெஷேஷ்கியான்(Masoud Pezeshkian) கடுமையாக முயற்சிப்பதாகவும், இதனால் ஈரான் அதிபருக்கும் இஸ்லாமிய புரட்சிப் படைக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக "தி டெய்லி டெலிகிராப்" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின்(Ismail Haniyeh) படுகொலைக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது தொடர்பாக ஈரான் ஜனாதிபதிக்கும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக குறித்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதியின் திட்டம்
ஈரானின் அண்டை நாடுகளில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசிய தளங்களை தாக்குவதற்கு ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் முன்மொழிந்துள்ளதாக "தி டெய்லி டெலிகிராப்" நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
புரட்சி காவலர் படையின் சபதம்
அதே நேரத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் தலைவர்கள் டெல் அவிவ் மற்றும் இஸ்ரேலின் பிற நகரங்களில் உள்ள இஸ்ரேலிய இராணுவ தளங்களை தாக்க வேண்டும் என்று கடுமையாக கூறியுள்ளனர்.
ஜனாதிபதி பெஷேஷ்கியானின் முன்மொழிவை புறக்கணித்து இஸ்ரேலை தாக்க இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தயாராகி வருவதாகவும், ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அல் கமேனியின் உத்தரவை இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை கண்டிப்பாக நிறைவேற்றும் என்றும் குறித்த நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |