இந்தியாவுடனான மோதல் : மாலைதீவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : வெளிவரும் அதிர்ச்சி தகவல்
இந்தியாவுடன் மோதல் போக்கால் மாலைதீவில் சுற்றுலாதுறை கடுமையாக பாதித்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் நஷீத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்தியாவுடன் மோதல் போக்கு, மாலைதீவை மிகவும் பாதித்துள்ளது. இதைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். மாலைதீவு மக்களும் வருந்துகிறார்கள் என்று சொல்ல விரும்புகிறேன். இது நடந்ததற்கு நாங்கள் வருந்துகிறோம். இந்திய மக்களிடம் மாலைதீவு மக்களின் சார்பாக மன்னிப்புக் கேட்கிறேன்.
விருந்தோம்பலில் எந்த மாற்றமும் ஏற்படாது
விடுமுறை நாட்களில் இந்திய மக்கள் மாலைதீவுக்கு வர விரும்புவர். எங்கள் விருந்தோம்பலில் எந்த மாற்றமும் ஏற்படாது.
மாலைதீவு அதிபர் முகமுது முய்சு, இந்திய இராணுவ வீரர்களை வெளியேறச் சொன்னபோது, இந்தியா மாலைதீவு அரசாங்கத்திடம் நாம் விவாதிப்போம் என்று கூறியது. இதுபோன்ற விஷயங்களைக் கையாள்வதில் இந்தியா வரலாற்றுப் பொறுப்பான அணுகுமுறையை கொண்டுள்ளது.
மாலைதீவு சீனா பாதுகாப்பு ஒப்பந்தம்
அதிபர் முய்சு, ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர் புகைக் குண்டுகளை வாங்க விரும்புகிறார் என்று நினைக்கிறேன். இவைகள் தேவை என்று அரசாங்கம் நினைத்தது மிகவும் துரதிஷ்டவசமானது.
துப்பாக்கிக் குழல் மூலம் ஆட்சி நடைபெறக்கூடாது. மாலைதீவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சமீபத்திய பாதுகாப்பு ஒப்பந்தம், ஒரு ஒப்பந்தமே அல்ல. அது உபகரணங்களை கையகப்படுத்துதல் ஆகும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |