எதிர்க்கட்சிகளுக்குள் வெடித்த குழப்பம்: காலைவாரி விட்ட முக்கிய புள்ளி
எதிர்க்கட்சிக்குள் இருக்கும் சக்திவாய்ந்த தலைவர் ஒருவர் காலைவாரி வருவதால், அமைக்கப்படவிருக்கும் கூட்டு பொதுக் கூட்டணியில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைவர் சமீபத்தில் அறிவித்ததன் காரணமாக இந்த நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தலைவர், ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களை மட்டுமே மாநாட்டிற்கு அனுப்பி, மௌனக் கொள்கையைப் பின்பற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான பிரச்சினை
மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுவார்கள் என்ற அச்சத்தில் அவர் இவ்வாறு நடந்து கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் உட்பட பல்வேறு கட்சிகளிடமிருந்து பரந்த எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க கோரிக்கைகள் வரும்போது, இந்தத் தலைவர் மட்டும் இவ்வாறு இழுத்தடிக்கும் கொள்கையைப் பின்பற்றுவது ஒரு கடுமையான பிரச்சினை என்று எம்.பி.க்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
