அரியநேத்திரன் தெரிவு திட்டமிட்ட சதி! செல்வராசா கஜேந்திரன் காட்டம்
Sri Lankan Tamils
Sri Lanka
Selvarajah Kajendren
Election
By Shadhu Shanker
இலங்கை இந்திய மற்றும் மேற்குலக அரசுகள் கூட்டாக திட்டமிட்டு பொதுவேட்பாளர் என்கின்ற ஒரு திட்டமிட்ட சதி நகர்வை செய்துகொண்டிருக்கின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S.kajendran) தெரிவித்துள்ளார்.
ஊடகத்திற்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “வழமைபோலவே தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றும் நாடகத்தில் சிங்கள் அரசியல்வாதிகள் ஈடுப்பட்டுள்ளார்கள்.
இந்தியா விரும்புகின்ற ஒருவரை பதவியேற்பதற்காக மக்களை ஏமாற்றி வழிநடத்துகிறார்கள்.
தமிழ் மக்களின் பேரம் பேசும் ஆயுதத்தை தோற்கடிக்க முயற்சி செய்கிறார்கள்” என்றார்.
இது தொடர்பான மேலததிக விபரங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி