மாற்றங்களைக் கொண்டுவர சிறிலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது! நாமல் திட்டவட்டம்
நாம் எமது நோக்கத்தை மக்களிடம் முன்வைப்போம் எனினும் மக்களே அவர்களது முடிவுகளை எடுப்பர் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நாட்டிற்குப் பொருத்தமான பொருளாதார, சமூக மாற்றங்களைக் கொண்டுவர சிறிலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
சிறிலங்கா பொதுஜன பெரமுன வெற்றியடையும் அரசியல் கட்சியாகும்.

தொழில் வாய்ப்பு, கைத்தொழிலைப் பெருக்கி நாட்டில் உள்ள அனைவரையும் பாதுகாக்க முடியுமான பரந்த கூட்டணியாக எமது கட்சி முன்னிலையாகிறது.
எமது கட்சிக்குள் மக்கள் மாறவில்லை மக்களின் பிரதிநிதிகளே மாறுகின்றனர்.
நாம் எமது நோக்கத்தை மக்களிடம் முன்வைப்போம். மக்களே அவர்களது முடிவுகளை எடுப்பர்” என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்