கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புதிய சொகுசு பேருந்து சேவை ஆரம்பம்
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து( Bandaranaike International Airport) புதிய சொகுசு பேருந்து சேவையொன்று ஆரம்பமாகியுள்ளது.
குறித்த புதிய சொகுசு பேருந்து சேவை இன்று (15) முதல் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து சேவைக்காக 10 சொகுசு பெரிய பேருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு பயணியிடம் இருந்து 3,000 ரூபாய் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய பேருந்து சேவை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு(Colombo) கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையம் வரையில் இந்த புதிய சொகுசு பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், நாட்டிற்குள் பயணிக்க போக்குவரத்து சேவை ஏஜென்சியின் வசதிகளைப் பெறவில்லை என்றால், அவர்கள் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவரிவத்த பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும்.
இதற்கமைய, விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பேருந்துகள் இடையில் நிற்காமல் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வழியாக செல்லும்.
இந்த புதிய பேருந்து சேவையானது, விமான நிலையம், ஏவியேஷன் கம்பெனி லிமிடெட், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் ஒரு தனியார் பேருந்து நிறுவனம் ஆகியன இணைந்து நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |