சுகாதாரத்துறையை சீர்குலைக்க சதித்திட்டம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்காலத்தில் நாட்டின் சுகாதாரத்துறையை (Health sector) சீர்குலைக்கும் அரசியல் சதித்திட்டம் இடம்பெறக்கூடும் என வைத்தியர் ருக்ஷான் பெல்லன (Rukshan Bellana) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதற்காக பொருளாதார சிரமங்களுடனான ஊழியர்களை நியமிக்க அந்த குழுக்கள் முயற்சிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய சுகாதார தொழிற்சங்க சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட போதே வைத்தியர் இதனை தெரிவித்தார்.
பணிப்புறக்கணிப்பு
இதேவேளை, பல கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 15 மணி நேரம் முன்
