நுவரெலியாவில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை குறைக்க சதி : இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டு

Nuwara Eliya V S Radhakrishnan General Election 2024
By Jaso Oct 16, 2024 10:14 AM GMT
Report

மலையக மக்களின் சிறுபான்மை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு திட்டமிட்ட வகையில் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் நுவரெலியா(nuwara eliya) மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன்(vs radhakrishan) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வியூகம்

இலங்கையில் வட,கிழக்கு பிரதேசங்களை தவிர்ந்த மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே 5 முதல் 6 சிறுபான்மை உறுப்பினர்கள் தெரிவு செய்ய வாய்ப்பு இருக்கின்றது. கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை போன்ற பகுதிகளில் மலையக தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும் அங்கே எமக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதில் போட்டி நிலவி வருகின்றது. அதனை சாத்தியப்படுத்துவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி வியூகம் வகுத்து இந்த தேர்தலில் செயல்பட்டு வருகின்றது.

நுவரெலியாவில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை குறைக்க சதி : இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டு | Conspiracy To Reduce Minority In Nuwara Eliya

சிறுபான்மை வாக்குகளை சிதறடிப்பதற்கான முயற்சி

ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு பல்வேறு சதி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக பல கோடிகளை இந்த தேர்தலுக்காக கொட்டிக் கொடுத்து எங்களுடைய சிறுபான்மை மக்களை விலைக்கு வாங்கி சுயேட்சையாகவும், பல சின்னங்களிலும் போட்டியிட வைத்து சிறுபான்மை வாக்குகளை சிதறடிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு எங்களுடைய சமூகத்தில் கல்வி கற்ற சிலரும் துணைபோவது மனதுக்கு வேதனையளிக்கின்றது.

நுவரெலியாவில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை குறைக்க சதி : இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டு | Conspiracy To Reduce Minority In Nuwara Eliya

கடந்த காலங்களில் இரத்தினபுரி, கண்டி பகுதிகளில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்ட பொழுது அவர்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கு யாரும் இருக்கவில்லை. நாம் அவர்களுக்காக குரல் கொடுத்தோம். அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி எமது சமூகத்திற்கான பிரச்சினையாக அதனை நாம் உணர்ந்தோம்.

பலமான அரசுக்கு பிரதமர் சஜித் : இராதாகிருஸ்ணன் சூளுரை

பலமான அரசுக்கு பிரதமர் சஜித் : இராதாகிருஸ்ணன் சூளுரை

ஆனால் இன்று நுவரெலியா மாவட்ட பிரதிநிதித்துவத்திற்கும் அந்த நிலையை உருவாக்க ஒரு சில சிறுபான்மை கட்சிகளும், தனவந்தர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

 உரியவர்களை தெரிவு செய்ய வேண்டும்

எனவே, நுவரெலியா மாவட்ட மக்கள் சிந்தித்து கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை மனதில் கொண்டு உரியவர்களை தெரிவு செய்ய வேண்டும்.

நுவரெலியாவில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை குறைக்க சதி : இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டு | Conspiracy To Reduce Minority In Nuwara Eliya

வெறுமனே, தேர்தல் காலங்களில் வந்து செல்பவர்களையும், தங்களுக்கு யார் என்று தெரியாதவர்களுக்கும் வாக்களித்து விட்டு பின்பு பிரச்சினைகள் ஏற்படுகின்ற பொழுது யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் குழம்புகின்ற ஒரு நிலைமை ஏற்படும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு

எனவே சிந்தித்து வாக்களித்து சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026