பேரிடரால் அழிந்த வீடுகள்! ஜனாதிபதியால் ஆரம்பமாகும் அடுத்த திட்டம்
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ், சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்குவதற்கான ஆரம்ப கட்டம் இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் தொடங்கவுள்ளது.
அதன்படி, குறித்த திட்டம் இன்று(09) அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அநுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹண்டுங்கம மற்றும் ராஜாங்கனய சிறிமாபுர பகுதிகளிலும், குருநாகல் மாவட்டத்தில் நிக்கவெரட்டிய, விடிகுலியாய சந்தி மற்றும் ரிடிகம தொடம்கஸ்லந்த பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தொடக்க வீட்டுவசதி கட்டுமானத் திட்டங்கள் நடைபெறும்.
சேதமடைந்த மொத்த வீடுகள்
சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பாதுகாப்பு அமைச்சின் பேரிடர் மேலாண்மைப் பிரிவின்படி, பேரிடர்கள் காரணமாக 6,500 வீடுகள் முழுமையாக அழிந்துள்ளதாகவும், பகுதியளவு சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 113,000 ஆகவும் உள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக ஏற்கனவே நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு முதல் கட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 5 மணி நேரம் முன்