வற் வரி அதிகரிப்பு : பொதுமக்களுக்கு நுகர்வோர் அதிகார சபை வேண்டுகோள்
நபட்டில் பெறுமதி சேர் வரி என்ற போர்வையில் பொருட்களின் விலையை நியாயமற்ற வகையில் அதிகரிக்கும் வர்த்தகர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை 1977 என்ற துரித இலக்கதிற்கு அழைத்து அறிவிக்க முடியும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
அத்துடன் இவ்விடயம் தொடர்பாக வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
முறைப்பாடுகளை அறிவிக்கலாம்
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் VAT வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அது தொடர்பான திருத்தச் சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, ஏற்கனவே 15 சதவீதமாக இருந்த VAT வரி, 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வரியை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாகவே நியாயமற்ற வகையில் பொருட்களின் விலையை அதிகரித்துள்ள வர்த்தகர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
எனவே, இதனைத் தடுக்கும் வகையில், இது தொடர்பான முறைப்பாடுகளை 1977 என்ற துரித இலக்கதிற்கு அழைத்து அறிவிக்க முடியும் என அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |