பால் மா விலைகுறைப்பு தொடர்பில் நுகர்வோர் குற்றச்சாட்டு
நாட்டில் நிலவும் வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் குறைக்கப்பட்ட பால் மாவின் விலை போதுமானதல்ல என நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
நேற்று (24) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பால் மாவின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் நிறையுடைய பால் மா பொதியொன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
நளின் பெர்ணான்டோ தெரிவிப்பு
இதேவேளை 400 கிராம் நிறையுடைய பால் மா பொதியொன்றின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பால் தேநீரின் விலை
இந்த நிலையில், பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து பால் தேநீரின் விலையை 80 ரூபாய் வரை குறைக்குமாறு தேசிய பாவனையாளர் முன்னணியினர் உணவக உரிமையாளர்களிடம் கோரியுள்ளனர்.
எனினும் பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |