மாணிக்கக்கல் வர்த்தகத்தில் கோடி ரூபாய் மோசடி: சிஐடியால் இளைஞர் சுற்றிவளைப்பு
மாணிக்கக்கல் வர்த்தகத்தின் போது பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
மாணிக்கக்கற்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் சுமார் 8 கோடியே 80 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா (ரூபாய். 88,050,000) பெறுமதியான 09 மாணிக்கக்கற்களை வர்த்தகர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்துள்ளார்.

இதற்கான கொடுப்பனவாக 6 கோடியே 46 இலட்சம் ரூபா (ரூபாய். 64,600,000) பெறுமதியான காசோலைகளை அவர் வழங்கியுள்ளார்.
இருப்பினும், அந்த காசோலைகளை வங்கியில் சமர்ப்பித்த போது, அவற்றை மாற்ற முடியாத வகையில் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இதன் மூலம் குறித்த இளைஞர், திட்டமிட்ட முறையில் பண மோசடி மற்றும் நம்பிக்கைத் துரோகத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், நேற்று (30-01-2026) கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்