இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் : காவல்துறை வலையில் சிக்கிய சட்டவிரோத பொருள்
செடாவத்தையில் உள்ள தனியார் கொள்கலன் முனையமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சுமார் 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான, 5.7 மில்லியன் சட்டவிரோத சிகரெட்டுகளைக் கொண்ட கொள்கலன் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால், நேற்று( 10) இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
துபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டகொள்கலன்
துபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொள்கலனில் 'மான்செஸ்டர்' (Manchester) ரக சிகரெட்டுகள் இருந்தன. இவற்றின் சந்தை மதிப்பு 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜா-எல மற்றும் கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (11) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தனர்.
image credit -daily mirror
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |