நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டமூலம்!
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, அரசாங்கத்தின் உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் இன்று (24) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி, குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைக்குமாறு நேற்றைய தினம் எதிர்க்கட்சிகள் கோரியிருந்தன.
இதையடுத்து, குறித்த விவாதத்தை நடத்துவது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று 33 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆதரித்து 83 வாக்குகளும் அதனை எதிர்த்து 50 வாக்குகளும் வழங்கப்பட்டன.
இரண்டாம் நாள் விவாதம்
இதனை தொடர்ந்து, இன்று நடத்தப்பட்ட இரண்டாம் நாள் விவாதத்தின் போது, சில அரசியல் கட்சிகள் அதனை எதிர்த்திருந்தன.
இந்த எதிர்ப்புக்களையும் மீறி, சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்பு சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |