ஒரு துண்டு நிலத்தையும் மீள கையளிக்க மாட்டேன்! தையிட்டி விகாராதிபதியின் கருத்தால் சர்ச்சை

Sonnalum Kuttram
By Theepan Feb 19, 2026 11:14 AM GMT
Report

சட்டவிரோத தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும் , மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகள் , தையிட்டி விகாராதிபதி , அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கொழும்பில் நேற்றைய தினம் புதன்கிழமை கூடி கலந்துரையாடிய போதே , விகாராதிபதி விகாரைக்கு என அறிக்கைப்படுத்தப்பட்ட காணியில் இருந்து சிறு துண்டு நிலத்தையும் விடுவிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனால் கூட்டம் நீண்ட இழுபறியுடன் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாமல் முடிவுற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த கூட்டம் மிக விரைவில் கூட இருப்பதாக அறிய முடிகிறது.

ஆசாமியால் வீதிக்கு வந்த அரசியல்வாதி...

ஆசாமியால் வீதிக்கு வந்த அரசியல்வாதி...

உரிமையாளர்களின் குற்றச்சாட்டு

தையிட்டி விகாரைக்கு என 19 பேரின் காணிகள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் காணிகளின் உறுதிகளை விகாரை பிரச்சினையை தீர்த்து வைக்கிறோம் என வரும் சகல தரப்பினருக்கும் வழங்கி வருகிறோம்.

அந்த வகையில் விகாரை பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு குழுவிடமும் தங்கள் காணி உறுதியை வழங்கியுள்ளோம்.

ஆனால் , விகாரை பிரச்சினையை தீர்ப்பதாக கூறி அவர்கள் இதுவரை பல்வேறு கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.

அந்த கலந்துரையாடல் எவற்றுக்கும் எம்மை அழைக்கவில்லை. விகாரதிபதியை மாத்திரம் அழைத்து கலந்துரையாடுகின்றனர். இது ஒரு பக்க சார்பான நடவடிக்கை என்பது அப்பட்டமானது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி விகாரை பிரச்சினையை தீர்ப்பதாக கொழும்பில் கூடி கலந்துரையாடுகின்றனர்.

அங்கு என்ன விடயம் கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பில் எமக்கோ , ஊடகங்களுக்கோ எவரும் தெரிவிப்பதில்லை.

இரகசிய கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் இருந்து மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , தையிட்டி விகாராதிபதி ஆகியோரை கொழும்புக்கு அழைத்து கலந்துரையாடுகின்றனர்.

கலந்துரையாடலுக்கு சென்ற மாவட்ட செயலரோ , கலந்துரையாடலை நடத்தியவர்களோ , கூட்டத்தில் கலந்துரையாடிய விடயம் தொடர்பில் வெளியே சொல்லாது , இரகசியமாகவே கலந்துரையாடுகின்றனர்.

இவர்கள் இவ்வாறு இரகசியமாக கலந்துரையாடி தாமே தீர்மானங்களை எடுத்த பின்னர் , அதனை எங்கள் மீது திணிக்க போகின்றார்களோ என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு நிரந்தர விசாரணை அறிவிப்பு மட்டும் வருகிறது… வருகிறது…

உயிர்த்த ஞாயிறு நிரந்தர விசாரணை அறிவிப்பு மட்டும் வருகிறது… வருகிறது…

தவறான செய்தி

தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளை கட்டம் கட்டமாக விடுவிப்பதாகவும், அதற்கு முதல் கட்டமாக ஒரு தொகுதி காணியை விடுவிக்கும் முகமாக விகாரையை சுற்றியுள்ள பகுதியை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள வேலியை பின் நகர்த்த தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செய்திகள் வெளியாகி இருந்தன.

அது தவறான செய்தி எனவும், வேலியை பின் நகர்த்துவதற்கு என தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு எவ்வித நிதியையும் ஒதுக்கவில்லை என பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

தையிட்டி விகாரை வேலியை பின் நகர்த்த தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு நிதி கிடைத்து உள்ளதாகவும் , வேலியை பின் நகர்த்தி அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை தனக்கு வேண்டியவருக்கு வழங்க வேண்டும் என பிரதேச சபை தவிசாளர் ஒருவர் பிரதேச செயலரிடம் வலியுறுத்தி வந்ததாகவும் , தவிசாளர் ஒருவர் அவ்வாறான ஒப்பந்தத்தை பெறுவது ஊழல் எனவும் அதனை தாம் தடுத்து நிறுத்தியதாகவும் , தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சில சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025