கோப் குழுவில் இருந்து வெளியேறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! அதிரடியாக பதவி விலகிய சாணக்கியன்
புதிய இணைப்பு
கோப் குழுவிலிருந்து பலர் பதவி விலகியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனும் பதவி விலகியுள்ளார்.
முதல் இணைப்பு
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு உறுப்பினர்
அதனை தொடர்ந்து, பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரதும் குறித்த குழுவில் இருந்து விலகியுள்ளார்.
I have decided to resign from the COPE (Committee on Public Enterprises) and have officially communicated my decision to the Speaker of Parliament today.
— Charitha Herath, (PhD) (MP) (@charith9) March 19, 2024
இந்த விடயத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |