நாடாளுமன்றத்தின் பொது விவகாரங்களுக்கான குழு: புறக்கணிக்கும் எதிர்க்கட்சி
நாடாளுமன்றத்தின் பொது விவகாரங்களுக்கான குழுவை புறக்கணிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
பிரேரணை
இந்நிலையில், முப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவின் முதலாவது கூட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதேவேளை, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையும் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நாடாளுமன்றில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.
நெல் கொள்வனவு
அத்துடன், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பிரேரணையின் பிரகாரம் விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |