மனம்பேரியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் பதவி! ஜோன்ஸ்டன் வெளியிட்ட நிலைப்பாடு
Johnston Fernando
Law and Order
By Dharu
சம்பத் மனம்பேரி என்பவர் தனது ஒருங்கிணைப்புச் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மறுத்துள்ளார்.
இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மனம்பேரி என்ற ஒருவர்
மேலும், தற்போது மனம்பேரி எனது ஒருங்கிணைப்புச் செயலாளர்களில் ஒருவர் என்று கூறுகிறார்கள்.
நான் இந்த மாவட்டத்திலிருந்து மட்டுமே ஒருங்கிணைப்புச் செயலாளர்களை நியமித்தேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்தக் கூற்று என்னுடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்று ஜோன்ஸ்டன் பெர்னாணடோ மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்