ஆபத்தான நிலையில் இலங்கை விடுக்கப்பட்ட எச்சரிக்கை
srilanka
corona
patient
ministry of health
By Jaso
புத்தாண்டு காலத்தில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாததன் விலையை நாடு இன்று செலுத்துவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கை கொரோனா தொற்று காரணமாக மிக ஆபத்தான நிலையில் உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் துணைப் பணிப்பாளர் எஸ்.எம். அர்னேல்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
மே தின நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்