கொரோனா தொற்று- வடிவேலுவின் தற்போதைய நிலை என்ன? மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பு
hospital
corona
discharge
actor vadivelu
By Sumithiran
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு, பூரண நலம் பெற்று வீடு திரும்பியதாக அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய வடிவேலுவுக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எஸ் ஜீன் மாறுபாடும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குணமடைந்த வடிவேலு, வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.