உயர்தர மாணவனையும் பலியெடுத்தது கொரோனா - சோகத்தில் கல்விச்சமுகம்
srilanka
corona
colombo
death
studet
By Sumithiran
இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து உயிரிழப்புக்களும் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவனும் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் மாணவனே இவ்வாறு தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்தவனாவான்.
குறித்த மாணவனுக்கு கடந்த 10 ஆம் திகதி தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நோயின் தீவிரத்தை அடுத்து கடந்த 14 ஆம் திகதி களுபோவில வைத்தியசாலையில் சி்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான்.
அவனுக்கு நோய் தீவிரம் அடைந்த நிலையில் ஒட்சிசன் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டநிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை பெற்றோர் உட்பட கல்விச்சமுகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி